தாமரை பூ பறிக்க சென்ற பள்ளி மாணவி சேற்றில் சிக்கி உயிரிழப்பு…
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே குளத்தில் தாமரை பூ பறிக்க சென்ற பள்ளி மாணவி சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் என்பவரது மகள் துர்காதேவி. இவர் பெரியகரம் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில், ஜல்லியூர் பகுதியில் உள்ள குளத்தில் இருந்த தாமரை பூக்களை பறிக்க துர்கா தேவி சென்றுள்ளார்.
அப்போது குளத்தில் உள்ள சேற்றில் மாட்டிக் கொண்டு மாணவி துர்கா தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாமரை பூ பறிக்க சென்ற மாணவி சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.