பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மூலவாய்க்காலில் செயல்பட்டு வரும் குருகுலம் தனியார் பள்ளியில், வாகன ஓட்டுனர்கள் பள்ளி வாகனங்களை கவனத்துடன் இயக்குவது மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது, பள்ளி வாகனங்கள் இயக்கும்போது திடீரென ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதனையடுத்து மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் கலைசெல்வன் முன்னிலையில் பள்ளி வாகனங்களில் திடிரென ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
