பிரமண்டமாக கட்டப்பட்ட லுலுமால்-திறந்து வைத்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..
தமிழ்நாட்டில் ரூ 3000 கோடி முதல் போடுவதாக, தமிழ்நாடு அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் முதல் கட்டமாக,
நேற்று கோவையில் லட்சுமி மில் வளாகத்தில் லுலு மால் திறக்கப்பட்டது. இந்த லுலு மாலை தமிழக தொழில்துறை அமைச்சர் “டி.ஆர்.பி.ராஜா” திறந்து வைத்தார்.
அதன்பிறகு ஊடகர்களிடம் பேசிய லூலூ குழுமத் தலைவர் எம்.ஏ. யூசுப்,
* அடுத்த வணிக வளாகம் சென்னையில் திறக்கப்படும்.
* மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்கூடம் அமைக்கப்படும்.
* தஞ்சாவூரில் ஒரு அரிசி ஆலை நிறுவப்படும்.
* ஒட்டுமொத்தமாக 6000 பேருக்கு வேலை வாய்ப்பு தரப்படும் என்று செய்தியாளர்களை சந்தித்த தலைவர் எம்.ஏ.யூசுப் பேசினார்