இந்திய ஜனநாயக கட்சி வாலிபரை வெட்டிய பிஜேபி பிரமுகர் வினோத்..!!
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டம், அரியமங்களம், அம்மா குளம் கிளைச் செயலாளர் தவ்பிக் என்ற தோழரை. இன்று மாலை அதே பகுதியை சேர்ந்த சமூக விரோத கஞ்சா விற்பனை ,செயின் பறிப்பு , இரண்டு சக்கர வாகன திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற பி ஜே.பி கட்சியை சேர்ந்த வினோத் ஏவிய மற்றும் அவனது கூட்டாளிகள் அரிவாளுடன் வந்து தோழர் தவ்பிக் அவர்களை சுற்றி வளைத்து கொலை செய்யும் நோக்கத்தில் உடலில் 10 இடங்களிலும் தலையிலும் கொடூரமாக வெட்டிச்சாய்க்துள்ளார்கள்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்ற தோழர் தவ்பிக் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அரியமங்கலம் காவல் நிலையத்தில், இந்த குற்றவாளிகள் இரண்டு நாட்களுக்கு முன், சுத்தம் செய்யும் வேலையை செய்து வந்ததாகவும், அரியமங்கலம் காவல்துறையினரிடம் நெருக்கமான உறவு வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயபடுத்தப்பட்ட தோழர் தவ்கித் போதை பழக்கத்திற்கெதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருபவர், சென்ற மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று ரத்த தான முகாமை நடத்தியிருக்கிறார். 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்த தானம் செய்து இருக்கிறார்கள்.
இது போன்ற பல்வேறு மக்கள் பணியில் அவர் ஈடுபட்டு வருவதால், அதை பொறுக்காத BJP கட்சியை சேர்ந்த வினோத், சமூக விரோத கும்பலே இத்தகைய கொடூர செயலை செய்திருக்கிறது. எனவே காவல்துறை உடனடியாக சம்மந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு மக்கள் சேவையில் ஈடுபட்டுவந்த தோழர் தவ்பிக், அவர்களுக்கு உரிய மேல் சிகிச்சை வழங்கிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், திருச்சி மாநகர் மாவட்டக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..
Discussion about this post