கருடன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்..!
நடிகர் சூரி:
வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சூரி அதில் இடம்பெற்ற பரோட்டா கமெடியில் சூரியின் எதார்தமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பரோட்டா சூரியாக அறியப்பட்டார்.
ஹீரோவான சூரி:
அதனை தொடர்ந்து ரஜினி,விஜய்,சூர்யா போன்ற முன்னனி நடிகர்களின் திரைப்படத்தில் காமெடி நாயகனாக நடித்த இவர் முதல்முறையாக விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருத்தார். நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் வசூலையும் வாரி குவித்தது.
இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது.இந்நிலையில் சூரி நடிப்பில் உருவான திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது.
கருடன்:
இயக்குநர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான கருடன் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இதில் சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி பலர் நடித்துள்ளனர்.
கதையின் சுருக்கம்:
விருப்விருப்பான கதைகள் சூரியின் உணர்வுபூர்வமான நடிப்பு பலரது பாரட்டை பெறும் என்பதில் ஐயம் இல்லை.
மண்,பொண்,பெண் இவைகளால் ஏற்படும் பிரச்சனைகளையும் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பு, சூரியின் விசுவாசத்துக்கான காரணம் கடைசியில் சூரி விசுவாசம் பக்கம் நிற்கிறாரா இல்லை நியாத்தின் பக்கம் நகர்கிறாரா என்பது தான் முக்கியமான கதையாகும்.
படத்தின் இடை இடையே யுவனின் இசை படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும். இடைவேளை சீனில் சூரியின் சாமி ஆட்டம் காண்போரை சிலிர்க்க வைத்துவிடும்.
கருடன் முதல் நாள் வசூல்:
விடுதலை திரைப்படத்தின் வெற்றியை போலவே இந்த படமும் சூரிக்கு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று திரையரங்கில் வெளியான இப்படம் முதல் நாளில் 3 கோடியை வசூலித்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் இதன் வசூல் எந்த அளவிற்கு உயரும் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
-பவானிகார்த்திக்