மருமகளை சித்திரவதை செய்ததற்காக சொந்த மகனையே கொன்ற தாய், தந்தை..!!
வாணியம்பாடி அருகே குடிபோதையில் தினமும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த மகனை மருமகள் உதவியுடன் கொலை செய்த தந்தை இருவர் கைது திம்மம்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சொரக்காயல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44). இவரது மனைவி லட்சுமி ( 40), இவர்களுக்கு 2பெண் மற்றும் 1ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் சசிகுமார் குடித்து விட்டு மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்த சசிகுமார். மனைவியை பிடித்து இரவு முழுவதும் சரமாரியாக தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சசிகுமாரின் தந்தை சுப்பிரமணி (வயது 70) மற்றும் மனைவி லட்சுமி ஆகியோர், சசிகுமார் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திம்மம் பேட்டை காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
பின் இது குறித்து மனைவி லட்சுமி மற்றும் தந்தை சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. விசாரணைக்கு பின்னரே கொலை சம்பவம் குறித்தும், எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது பற்றியும் தெரிய வரும் என காவல் துறையினர் கூறினார்.
Discussion about this post