13 வயது சிறுமியுடன் 17 வயது சிறுவன் செய்த செயல்… விசாரனையில் வெளிவந்த பகீர் தகவல்..!
சென்னை ஈசிஆர் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பொத்தேல் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. பாட்டியுடன் வசித்து வரும் இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பாட்டி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நீலங்கரை போலீசார் மாணவியின் பள்ளிக்கு அருகாமையில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்தனர்.
அதில் அந்த மாணவி சிறுவன் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் யார் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுவன் திருவான்மியூர் அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்து போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. அதாவது 17 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் கடந்த சில மாதங்களாக இருவரு காதலித்து வந்ததாகவும் பாட்டிக்கு தெரிந்தால் காதலை பிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
பின்னர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”