மாணவியின் உயிரை பறித்த நூடுல்ஸ்.. ஆன்லைன் ஆர்டரால் நேர்ந்த சோகம்..
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதிக்கு அடுத்துள்ள அரியமங்கலத்தை சேர்ந்த தம்பதியினரின் மகள் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ். இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த்நிலையில் நேற்று இரவு மொபைல் போனில் நூடுல்ஸ் விளம்பரத்தை பார்த்துள்ள மாணவி ஆன்லைனில் அதை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஆர்டரின் பேரில் வீட்டிற்கு வந்த நூடுல்ஸை சாப்பிட்ட அவர் இன்று காலை சுயநினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவறிந்து வந்த அரியமங்கலம் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறுமி இறந்த காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”