பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தான் மீது விமானத்தாக்குதல் நடத்தியது. இந்த சமயத்தில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி இந்தியாவை கடுமையாக விமர்சித்தார். காஷ்மீரில் 8 லட்சம் ராணுவத்தினரை இந்தியா குவித்து வைத்துள்ளது. அப்படியிருந்தும்., இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பு கூட கொடுக்க முடியவில்லை என்றும் அப்ரிதி பேசியிருந்தார்.
தொடர்ந்து, இந்தியாவை அவர் விமர்சித்து கொண்டிருந்தார். இந்த நிலையில், துபாயில் கேரளாவை சேர்ந்த கொச்சி பல்கலைக்கழக பி. டெக் முன்னாள் மாணவர்கள் துபாயிலுள்ள பாகிஸ்தான் அசோசியேஷனில் ஓர்மச்சுவடுகள் என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அப்ரிதி கலந்து கொண்டார். அப்போது, அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவை தொடர்ந்து, விமர்சிக்கும் அப்ரிதியை கேரள மக்கள் தங்கள் விழாவுக்கு அழைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சமூகவலைத் தளங்களில் பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விமர்சித்துள்ளனர். அதிகம் படித்த இந்த மக்கள் தங்கள் நாட்டுக்கு எப்படி துரோகம் செய்கிறார்கள் என்று பாருங்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் இது வெட்கக் கேடான செயல் என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் கேரளா மினி பாகிஸ்தான் என்பதை நிரூபித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.