உத்தரபிரசே மாநிலம் நொய்டாவை சேர்ந்த சுனில் பிரதான். இவருக்கு அன்சு (வயது 20)என்ற மகன் உண்டு. இரு நாட்களுக்கு முன்பு, அன்சு வீட்டில் கழிவறையை பயன்படுத்தி விட்டு , ப்ளஷ் செய்துள்ளார். அப்போது, கழிவறை வெடித்து சிதறியது. இதில், அன்சு 35 சதவிகித தீக்காயங்களுளுடன் நொய்டாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழிவறை வெடித்து சிதறிய போது, அன்சு எந்த விதமான எலக்ட்ரானிக் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. வீட்டிலுள்ள ஏசி உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் நல்ல முறையிலேயே இயங்கி வந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், கழிவறை தொட்டியில் மீத்தேன் உருவாகியிருக்கலாம். அதன் காரணமாக வெடித்திருக்கலாம் என்கின்றனர்.