செமிகண்டக்டர் நிறுவனத்திடம் கோடி கணக்கில் நன்கொடையாக பணத்தை பெற்றுக் கொண்ட பாஜக அரசு, ரூ.3,501 கோடி அந்நிறுவனத்திற்கு மானியமாக வழங்கியுள்ளத அதிர்ச்சி தகவல்கள் வெளியான பின்னணி என்னவெறு பார்ப்போம்.
எலக்ட்ரானிக் சிப்கள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்களைதான் செமி கண்டக்டர் யூனிட் என்கிறோம். அவந்தா குழுமத்திற்குச் சொந்தமான CG Power and Industrial Solutions என்ற செமி கண்டன்டர் நிறுவனத்தில் ரூ. 2,435 கோடி வங்கி மோசடி நடந்திருப்பதாக 2019 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா குழுமம் 2020 ம் ஆண்டு வாங்கியது. 2021, ஜூன் மாதம் சி.ஜி. பவர் மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், 2023 ம் ஆண்டு செமிகண்டக்டர் யூனிட் அமைக்க சி.ஜி பவர் நிறுவனம் விண்ணப்பித்தது. இதனை ஏற்று குஜராத்தில் ரூ.7,600 கோடி செலவில் செமிகண்டக்டர் யூனிட் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்தது.
தொடர்ந்து, அடுத்த ஆண்டே நமோ ட்ரோன் திதி என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு 1,000 ட்ரோன்கள் வழங்கப்பட்டது. இதில் 200 ட்ரோன்களை முருகப்பா குழுமத்தை சேர்ந்த கோரமண்டல் நிறுவனம் வழங்கியது.
2024 ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி கோரமண்டல் நிறுவனம் சென்னையை சேர்ந்த டிரையம்ப் தேர்தல் அறக்கட்டளைக்கு ரூ.25 கோடி நிதி வழங்கியது. அதே தேதியில் டிரையம்ப் தேர்தல் அறக்கட்டளை பாரதிய ஜனதாக கட்சிக்கு ரூ.25 கோடியை நன்கொடையாக அளித்ததது. பிறகு இரண்டு நாட்கள் கழித்து குஜராத்தில் நடந்த சி.ஜி. பவர் செமிகண்டக்டர் யூனிட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி , காங்கிரஸ் கட்சியால் பல ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்ய முடியுமே தவிர பல ஆயிரம் கோடி செலவில் செமி கண்டக்டர் யூனிட்டை தொடங்க முதலீடு செய்ய முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மீண்டும், 2024ம் ஆண்டு முருகப்பா குழுமம் டிரையம் தேர்தல் அறக்கட்டளைக்கு ரூ.105 கோடியை வழங்கியது. இதையடுத்து,டிரையம்ப் அறக்கட்டளை பாஜக-விற்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்கியது. கடந்த ஜனவரி மாதத்தில் சி.ஜி பவர் நிறுவனத்துக்கு 3,501 கோடி ரூபாய் மத்திய அரசு மானியமாக வழங்கியதுதான் வில்த்தனத்தின் உச்சம் எனலாம். தங்கள் கட்சிக்கு அதிக நன்கொடை அளிக்கும் நிறுவனங்களுக்கு மானியத்தை அள்ளி வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்கிற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது.
அதே போல, சி.ஜி பவர் மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகள் மீதான வங்கி மோசடி வழக்கில் முக்கிய ஆவணங்களை சிபிஐ தாக்கவில்லை. இதையடுத்து, டெல்லி நீதிமன்றம் சிபிஐ-யை கண்டித்த சம்பவமும் நடந்துள்ளது.
கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்று விட்டு, அந்த நிறுவனங்களுக்கே பாரதிய ஜனதா கட்சி மானியம் அளித்ததுதான் மக்ளுக்கு செய்யும் பச்சை துரோகம். அப்படி, ஒரு பச்சை துரோகத்தை செய்ய இந்த அரசு பயப்படாது என்பதும் மக்களுக்கு தெரியும் என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.