ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்தலில் ஹரியானாவை சேர்ந்த கடற்படை வீரரும் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 16ம் தேதிதான் இவருக்கு திருமணம் நடந்தது.
ஹரியானாவை சேர்ந்த கடற்படை வீரரான வினய் நார்வால் கொச்சியில் கடற்படையில் பணி புரிந்து வந்தார். கடந்த 16ம் தேதிதான் இவருக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து, தேனிலவுக்கு மனைவியுடன் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு, தீவிரவாதிகளால் வினய் கொல்லப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரின் சடலத்தின் முன் அவரின் மனைவி அமைதியாக அமர்ந்திருக்கும் படம்தான் இணையத்தில் வைரலானது.
ஹரியானாவில் வினயின் சொந்த ஊரான கர்னால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 4 நாட்களுக்கு முன்புதான் அவரின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டோம். மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. இப்போது, எங்களால் அந்த துயரத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று அக்கம் பக்கத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர்.
அதே போல, பீகாரை சேர்ந்த ஐ.பி அதிகாரி மணீஷ் ரஞ்சன் என்பவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவர், ஹைதரபாத்தில் பணி புரிந்து வந்தார். இந்த தாக்குதலில் மொத்தம் 27 பேர் கொல்லப்பபட்டுள்ளன.ர 17 பேர் காயமடைந்துள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து, சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி உடனடியாக தாய்நாடு திரும்பினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா ஸ்ரீநகரில் முகாமிட்டு தீவிர ஆலோசேனை நடத்தி வருகிறார்.