கேரளா ஸ்டைல் தக்காளி தால்..!
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு 1 கப்
தக்காளி 4
பச்சை மிளகாய் 2
சீரகம் 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 3
தேங்காய் 1/2 கப்
சின்ன வெங்காயம் 6
கறிவேப்பிலை சிறிது
கடுகு 1 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
தண்ணீர்
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் கழுவிய துவரம் பருப்பை சேர்த்து அதில் நீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பருப்பை சேர்த்து அதில் நறுக்கிய தக்காளி,உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் 3 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இன்னும் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு ஃபேனில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.
பின் இதில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு இதனை வேகவைத்த பருப்பில் சேர்த்து கலந்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைல் தக்காளி தால் தயார்.