சுவையான வெண் பொங்கல் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
அரிசி 1/2 கப்
பாசிப்பருப்பு 1/4 கப்
நெய் 3 ஸ்பூன்
சீரகம் 1 1/2 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
இஞ்சி 1 துண்டு
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1/4 கப் பாசிப்பருப்பை சேர்த்து வாசனை வரும் வரை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
பின் அதனை தனியே ஆறவைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் அரிசியை எடுத்துக் கொண்டு அதில் 1/4 கப் பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்றாக கழுவ வேண்டும்.
ஒரு குக்கரில் இதனை சேர்த்து அதில் சீரகம், பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.
பின் ஆவி போனதும் குக்கரை திறந்து கிளறிவிட வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு சேர்த்து பொரிந்ததும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக பொரிந்ததும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் இதனை வேகவைத்த பொங்கலில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான டேஸ்டில் வெண்பொங்கல் தயார்.
இதனுடன் தொட்டு சாப்பிட சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.