சில நொடியில் ஓட்ஸ் பகோடா தயார்…! சூப்பரான டேஸ்டில் ரெடி..!
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் 1 கப்
பெரிய வெங்காயம் ஒன்று
இஞ்சி ஒரு துண்டு
பச்சை மிளகாய் இரண்டு
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
மிளகாய் தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
கருவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
எண்ணெய் பொரிக்க
ஒரு அகலமான பாத்திரத்தில் நீளமாக வெட்டிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதை அப்படியே சிறிது நேரத்திற்கு வைக்கவும்.
பின் அதில் ஓட்ஸ் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை கிள்ளி சிறு சிறு துண்டுகளாக போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்ளோதான் சுவையான இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பகோடா தயார்.