முகத்தில் எப்போதும் எண்ணெய் வழியுதா..? அப்போ இதை ட்ரைப் பண்ணுங்க…
* முகத்தில் எண்ணெய் வழியும்போது துணியால் துடைக்க வேண்டும்.
* அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* முகத்துக்கு கடலைமாவு, பயித்தம் மாவு ஆகியவற்றைக் கொண்டு தேய்த்து கழுவி வந்தால் முகம் எண்ணெய் வழியாமல் பளிச்சென்று இருக்கும்.
* அன்றாடம் ஒரு கேரட் உண்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை மறையும்.
* பீட்ரூட் தக்காளி சாறு அடிக்கடி குடித்து வந்தால் சருமம் நன்றாக இருக்கும்.
* எண்ணெயில் சுட்ட பலகாரங்களை அதிகமாக சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
* தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரை கொண்டு முகத்தில் தேய்க்க வேண்டும், மற்றொரு பாதியை கஸ்தூரி மஞ்சள் தடவி முகத்தில் தேய்த்து காயவிட்டு அலச வேண்டும்.
* துளசி, வேப்பிலை, புதினா ஆகியவற்றை எடுத்து நீரில் சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தயில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை அலம்பிவர சருமம் பொன்னிறமாகும்.
இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கடுமையான முகப்பருவும் மறையும். முகம் பொலிவடையும்.