90ML களவாணிய ஓவியா..!!
நடிகை ஓவியா என்றால் தெரியாத ஆளே இல்லை ஏன் என்றால் தமிழ் சினிமாவில் மட்டும்மல்ல மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் ஓவியா பேமஸ் ஆனார்.
மலையாளத்தில் வெளியான படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த ஓவியா தமிழில் முதன் முதலில் களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஓவியாவிற்கு அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது…
அழகிய தோற்றம் கியூட் ஆன எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஓவியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கியது மெரினா, மதயானை கூட்டம், கலகலப்பு போன்ற படங்களில் நடிகையாவும் சில வசனங்கள் காமெடியாகவும் பேசி இருப்பார்..
காமெடியில் கலக்கிய ஓவியா.., ஹலோ நான் பேய் பேசுறன், யாமிருக்க பயமேன், 144 போன்ற படங்களில் கொஞ்சம் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் பேய் என்றால் பயமாக இருக்க தேவையில்லை அழகாக கூட இருக்கும் என இந்த படத்தில் தான் காட்டி இருப்பாங்க..
சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த நம்ப ஓவியாவின் மீது யார் கண் பட்டதோ அப்படியே நம்ப ஓவியா பின்னடைந்து விட்டார்.., அதன் பின் சில கவரிச்சி உடை அணிந்து ஒரு சில படங்களில் பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது..
அதன் பின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் முதன் முதலாக வெளியான் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்..,
அதில் ஓவியாவிற்கு நிறைய ரசிகர்கள் வர ஆரம்பித்தனர்.., இதுவரை ரசிகர்கள் மட்டுமே இருந்த ஓவியாவிற்கு அந்த நிகழ்ச்சிக்கு பின் ஓவியா ஆர்மி தொடங்கியது…
அதன் பின் 90 எம்எல் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.., ஹீரோயினாகவும் காமெடியாகவும் கலக்கி கொண்டிருந்த நம்ப ஓவியா, இந்த படம் ஹிட் கொடுக்கும் என நினைத்திருந்தார்.., ஆனால் இந்த படம் பெரும் தோல்வி கொடுத்தது..,
அதற்கு காரணம் இந்த படத்தில் ஓவியா தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, லிவ் இன் ரிலேஷன்ஷிப் போன்ற விஷயங்களை செய்திருப்பார். அது ரிலீஸ் ஆன நேரத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன் பின் முனி4, களவாணி 2 போன்ற படங்களில் நடித்தாலும் தற்போது வரை அவரால் பிரபலம் அடைய முடியவில்லை…,
திறமையுடன் என்றாவது ஒரு நாள் சினிமாவில் ஒரு சிகரத்தை அடைந்து விடுவோம் என்ற எண்ணத்துடன் காத்துக் கொண்டிருக்கும் “ஓவியா” இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி கொண்டாடு இருக்கிறார்..
இன்று பிறந்தநாள் காணும் ஓவியாவிற்கு ரசிகர்கள் சார்பாகவும் மதிமுகம் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..