ரூபாய் 2,500 க்கு மேல் பட்டாசு வாங்கினால் பரிசாக பைக், டிவி, மிக்சி, வெள்ளி நாணயங்கள்!!!
பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னிலைப்படுத்தி, நண்பர்கள் குழு நடத்திய பட்டாசு கடையில் குலுக்கல் முறையில் தீபாவளி பரிசு மழையில் பைக் ,டிவி, மிக்ஸி போன்றவை பரிசாக வழங்கபட்டது.
பண்டிகை கால விற்பனையில், பொருட்களை விற்க வழக்கமாக தள்ளுபடி பரிசு மழை அறிவிப்பார்கள்.
அந்த அடிப்படையில் கோவையில் தற்காலிகமாக பட்டாசு கடை அமைக்கப்பட்டது . வாடிக்கையாளர்கள் 2,500 ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கினால், அவர்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தீபாவளி பரிசாக பைக், டிவி, மிக்சி, வெள்ளி நாணயங்கள் தீபாவளி பரிசாக தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.


















