திருச்செந்தூர் முருகன் கோவிலில் 3.10கோடி காணிக்கை..!!
திருச்செந்தூர் முருகனின் கோவிலில் இந்த மாதம் மட்டும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் 3.10 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மாதந்தோறும் வசூலாகும் உண்டியல் பணத்தை என்னும் பணி நேற்று, முன் தினம் தொடங்கியது.
கோயில் காவடி மண்டபத்தில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் உண்டியல் என்னும் பணி தொடங்கியது.
அதில் காணிக்கை பணமாக மட்டும். 3 கோடியே, 10 லட்சத்து, 40 ஆயிரத்து , 748 ரூபாய் வசூல் ஆகியுள்ளது. மேலும் 2கிலோ 800 கிராம் தங்கமும், 25 கிலோ வெள்ளியும் காணிக்கையாக வசூல் ஆகியுள்ளது. உள்நாட்டு பணம் நகை மட்டுமின்றி வெளிநாட்டு பணம் 292 டாலர்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.
கடந்த மாதம் கோடை விடுமுறை என்பதால், இந்த அளவிற்கு காணிக்கை கிடைத்துள்ளது என்று இந்து சமய அறநிலைய துறை அதிகாரி கூறினார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக செய்திகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post