தஞ்சையில் ஒரே இடத்தில் 24 கருட சேவை; உற்சாகத்தில் பக்தர்கள்..!
தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில் இந்து சமய அறநிலையதுறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தர்சன சபை சார்பில் 24 கருட சேவை விழா நடத்தப்படும்.
தஞ்சாவூரில் உள்ள வைணவ கோவில்களில் முதன்மையாக இருப்பது வெண்ணாற்றாங்கரை நீலமேக பெருமாள் கோவிலின் 89ம் ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இன்று காலை தஞ்சாவூர் நீலமேக பெருமாள் கோவில், மணிக்குன்ற பெருமாள் கோவில், மேல சிங்கபெருமாள் கோவில், வேளூர் வரதராஜர் கோவில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், நவநீத கிருஷ்ணன் கோவில், மேலவாசல் ரெங்கநாதர் கோவில், விஜய ராமர் கோவில், கோவிந்த ராஜ பெருமாள் கோவில், ஜனார்த்தன பெருமாள் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கீழ கோதண்டராமர் கோவில், ஜனார்த்தன பெருமாள் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கீழ கோதண்டராமர் கோவில், கீழ சிங்கப்பெருமாள் கோவில், படித்துறை வெங்கடேச பெருமாள் கோவில், பஜார் ராமர் கோவில், உட்பட மொத்தம் 24 கோவில்களில் இருந்தும். பெருமாள் கருட வாகனத்தில் கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜ வீதி மற்றும் மேல ராஜ வீதி வழியாக பொது மக்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், 24 பெருமாளும் ஒரே இடத்தில் காட்சி கொடுப்பதால் , வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள், சிறப்பு தீப ஆராதனை செய்து சென்றனர்.
கருட சேவைக்காக ஆங்காங்கே தண்ணீர் பந்தல், அன்னதானம் என அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post