திருமணதடை நீக்கும் பார்வதி யாகம்; சத்தியமங்கலத்தில் குவிந்த பக்தர்கள்..
சத்தியமங்கலம் அருகேயுள்ள கொம்பா நாயக்கன் பாளையத்தில் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. வருடந்தோறும் வைகாசி மாதம் திருமணதடை நீக்கும் யாகம் செய்யப்படுவது வழக்கம.
இன்று காலை 27வது வருட திருமணதடை நீக்கும் பார்வதியாகம் நடைபெற்றது. இன்று காலை 8மணியளவில் விநாயகர் பூஜையுடன், யாகம் தொடங்கப்பட்டது. இந்த யாகத்தில் நவக்கிரக ஆலயத்தை சுற்றிவிட்டு யாக குண்டலத்தில் நவதானியங்களை தலையை சுற்றி போட்டனர்.
இதனை தொடர்ந்து ஆண்கள் வாழை மரத்திற்கும், பெண்கள் பாலை மரத்திற்கும் மாலை அணிவித்து மாங்கல்ய தோஷத்தை நீக்கி கொண்டனர். பின் கருந்துளசி, தொட்டசிணுங்கி போன்ற மூலிகை செடிகளுக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி சனிதோஷம், ராகு கேது தோஷம், மாங்கல்ய தோஷம், நவக்கிரக தோஷம் நீக்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதன் பின் மதியம் 12:30 மணியளவில் மகாபூர்ணாகுதி பூஜையும், மதியம் 1 மணியளவில் பரமேஸ்வரன் பார்வதிக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. இந்த திருமணத்தடை நீக்கும் யாகத்தில் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட அணைத்து ஊர் திருமணம் ஆகாத இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..