இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பேக்கிஸ்தான் சுகாதார துறை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில்ன் உத்திர பிரதேசத்திலுள்ள நொய்டா நகரில் இருக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டாக்-1 மேக்ஸ் என்ற சிரப் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பேக்கிஸ்தான் சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதார துறை கூறுகையில், இறந்த குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, இந்த மருந்தை 2-7 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3-4 முறை, 2.5-5 மில்லி, குழந்தைகளுக்கான மருந்தின் நிலையான அளவை விட அதிகமாக எடுத்துக்கொண்டது கண்டறியப்பட்டது என்று கூறியது.
மேலும் மருந்தை பற்றி கூறுகையில், இந்த மருந்து நச்சுத்தன்மை வாய்ந்தது, மேலும் 95% செறிவூட்டப்பட்ட கரைசலில் சுமார் 1-2 மில்லி/கிலோ நோயாளியின் ஆரோக்கியத்தில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும்,இதனால் வாந்தி, மயக்கம், வலிப்பு, இருதய பிரச்சினைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்றும் உஸ்பேக்கிஸ்தான் இப்போது டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தின் மாத்திரைகள் மற்றும் சிரப்களை சந்தைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
.