பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை இந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
வரும் பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள துணிவு படமும் விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் இரண்டு மாதங்களாக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், வாரிசு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பா வேகமாக நடைபெற்று வரும் நிலையில் துணிவு படம் சமூக வலைத்தளங்களில் படத்தின் போஸ்ட்டரை மட்டும் வெளியிட்டு ப்ரோமோஷன் செய்து வருகிறது. இதனால் அஜித் ரசிகர்களே சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை 1ம் தேதி முதல் தொடங்கலாம் ன்று அந்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதன்படி வரும் 31ம் தேதி துணிவு படத்தின் ப்ரோமோரிஷன்காக அந்த படத்தின் ட்ரைலரை துபாயிலுள்ள உலக புகழ்பெற்ற புர்ஜ் கலீபா வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. மேலும் அதன் பிறகு அணைத்து ஊடகங்களுக்கும் துணிவு படத்தின் படக்குழு நேர்காணல் நடத்தவுள்ளதாகவும் இதில் படத்தின் இயக்குனர் வினோத் மற்றும் சில நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் நடிகர் அஜித் கலந்து கொள்ளமாட்டார் என்றே தகவல் வந்த நிலையில் இருக்கிறது. எது எப்படியோ படத்தின் ப்ரோமோஷன் பணிகளை இப்போவாவது தொடங்குகிறார்கள் என்று அஜித்தின் ரசிகர்கள் சற்று ஆறுதலடைந்து உள்ளனர்.