அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க ராணுவத்தில், ‘கோல்டன் டோம்‘ என்கிற அதிநவீன ராணுவ தளவாடம் ஒன்றைச் சேர்க்க போவதாக தெரிவித்துள்ளார். இதன் மொத்த மதிப்பு கிட்டதட்ட 175 பில்லியன் டாலர். ஆரம்பகட்டமாக, இந்தத் தளவாடத்திற்கு 25 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “அமெரிக்க ராணுவத்திற்காக அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்பு கட்டப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்க மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தேன். அந்த அதிநவீன அமைப்பிற்கான டிசைனைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் . இது அமெரிக்க முன்னாள் அதிபரி டொனால்ட் ரீகனின் கனவு திட்டம். நமது தாய்நாட்டை காக்க இத்தகை திட்டங்கள் அவசியமாகிறது என்று கூறியுள்ளார்.
கோல்டன் டோம் முழுவதும் உருவாக்கப்பட்டதும் , உலகத்தின் அடுத்த பக்கத்தில் இருந்து அல்லது விண்வெளியில் இருந்து கூட ஏவுகணையை ஏவினாலும், அது அமெரிக்காவில் விழாதப்படி இந்த அமைப்பு தடுத்துவிடும். இந்த முயற்சியை அமெரிக்காவின் விண்வெளிப் படை ஜெனரல் மைக்கேல் குட்லின் தலைமையேற்று நடத்துவார். இந்த முயற்சியில் பங்கு கொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் கோல்டன் டோமுக்காக கிட்டத்தட்ட 500 கோடியை அமெரிக்கா செலவிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கோல்டன் டோம் கப்பல் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் என எந்த ஏவுகணையாக இருந்தாலும், அதுவும் அவை சாதாரணமானது அல்லது அணு ஆயுதம் என எதுவாக இருந்தாலும் தோற்கடிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்த வான் தடுப்பு அரண் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.