நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியீடு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in ; dge1.tn.nic.in ; dge2.tn.nic.in ; dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.