ரத்னம் படம் ஃப்ளாப் ஆக காரணம்..! அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விஷால்..!
செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷால். பல வருடங்களாகவே ஒரு ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டைம் ட்ராவல் படம் :
தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களை மக்கள் அதிகம் விரும்புவார்கள். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படம் பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர்.
வெற்றியின் உச்சத்தில் விஷால் :
இந்த படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் குதித்த விஷால் தாமிரபரணி,பூஜை, ஆகிய படங்களை இயக்கிய ஹரி நடிப்பில் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இந்த நல்ல படம் வெற்றியை பெரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
அரண்மனை 4ஆல் டல்லடித்த ரத்னம் :
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ரத்னம் மேக்கிங் மற்றும் திரைக்கதை நன்றாக இருக்கிறது. என ஒரு தரப்பு கூறினாலும் இன்னொரு பக்கம் எதிர் பார்த்ததை ரத்னம் படம் பூர்த்தி செய்யவில்லை என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 சூப்பர் ஹிட்டானதால் ரத்னம் டல்லடித்து விட்டதாகவும் பேசபடுகிறது.
அடுத்த படத்தில் இணையும் விஷால் :
விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குட்டிப்புலி, மருது, கொம்பன், விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்தப் படத்துக்கு முன்னதாக மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாவது பாகத்தை தானே இயக்கி நடிக்கும் பணியில் விஷால் இறங்கியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..