முடிவிற்கு வருமா அக்னிவீர் திட்டம்..? ராகுல்காந்தி சொன்னது..?
மக்களவைத் தேர்தலில் மோடி வாரணாசி தொகுதியிலும், ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சோனியா காந்தி, ரேபரேலியில் தனக்கு அளித்த இடத்தை ராகுல் காந்திக்கு கொடுங்கள் என கேட்டுகொண்டார்.
பின்னர் பேசிய ராகுல் காந்தி, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதுதான் முதலில் நாம் செய்ய வேண்டிய முதல் கடமை என தெரிவித்தார்.
அக்னிபத் திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தால் 14 ஜூன் 2022 அன்று அங்கீகரிக்கப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு செப்டம்பரில் நாட்டில் செயல்படுத்தப்பட்ட கடமை பாணி திட்டமாகும். 2022, ஆயுதப்படைகளின் மூன்று சேவைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தரத்திற்குக் குறைவான வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக.
அக்னிவீர் திட்டத்தை செயல்படுத்தி இந்திய இளைஞர்களை மோடி. அவமதித்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, அக்னிவீர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும், ஏழை குடும்ப பெண்களுக்கு மாதம் தோறும் 8,500 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..