கருவளையத்திற்கு டாக்டர் சொல்லும் டிப்ஸ்..!
கருவளையம் என்பது பெண்களுக்கு மிகவும் கவலைபடக்கூடிய விஷயங்களில் ஒன்று.
கருவளையம் பல காரணங்களால் வரக்கூடும். இதற்கு முதலில் வீட்டு வைத்தியம் செய்து பாருங்கள்.
1) கருவளையம் உள்ள இடங்களில் ஒரு ஈர துணியை நினைத்து ஒற்றி எடுக்க வேண்டும்.
2) படுக்கும்போது தலையை கொஞ்சம் தூக்கிவைத்து படுத்தால் கண்களின் கீழ் இமை வீங்குவது குறையும்.
3) ஒரு நாளைக்கு சுமார் 8 மணி நேரம் இரவில் கண்டிப்பாக தூங்க வேண்டும்.
4) மது அருந்துவது, சிகரட் பிடிப்பது போன்ற பழக்கத்தை விட வேண்டும்.
5) வெளியே செல்லும் போதும், சூரிய ஒளியில் வேலை பார்க்கும்போதும் கருப்பு கண்ணாடி மற்றும் தொப்பி அணிய வேண்டும். சன் ஸ்கிரீன் போட்டுக்கொண்டு வெளியே செல்ல வேண்டும்.
6) கருவளையம் போக வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்து எடுத்து வந்தால் நல்ல மாற்றம் தரும்.
7) உணவில் ஆரோக்கியமான , சத்தான உணவுப்பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படி மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றியும் கண்களின் கருவளையம் குறையவில்லை என்றால் நல்ல சரும நோய் சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.