90 நிமிடங்களில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்..!! யூடியூப் செனல் ஆரம்பித்த உடனே கோல்டு பட்டனா..?
கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் “கிறிஸ்டியானோ ரொனால்டோ” போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்.., உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. கால்பந்தின் உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக Followers களை கொண்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது..
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்களை கொண்ட விளையாட்டு வீரர் ரொனால்டோ தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகாலத்தில் இருக்கிறார்.. இந்நிலையில் தற்போது அவர் யுடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம் அவர் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்..
அதற்காக “UR christiano” என்ற யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்., தொடங்கிய உடனே அவர் அடுத்தடுத்து சில வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். சேனல் ஆரம்பித்த 90 நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் பெற்றுள்ளார் ரொனால்டோ. சேனல் ஆரம்பித்த ஒன்றரை மணிநேரத்தில் யுடியூபின் கோல்டன் பட்டனையும் அவர் பெற்றுள்ளார். அதோடு 12 மணி நேரத்தில் அவர் சேனலின் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..
மறுப்பக்கம் சேனல் ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகியும் புதிய புதிய வீடியோக்களை பதிவேற்றம் செய்தும் இன்னும் 1000 subscriber முதல் 1 லட்சம் subscriber கூட வரவில்லை என நெட்டிஸைன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..