பட்டப்பகலில் இளைஞர் கொலை.. போலீசார் விசாரணை..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூர் என்ற இடத்தில் இன்று காலை எட்டு மணி அளவில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் வந்த ஐந்து நபர்கள் அவரை மறித்து திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் அவரை வெட்ட சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிக்க பயந்துள்ளார்.
ஐந்து நபர்களும் அந்த இளைஞரை நடுரோட்டில் துரத்திச் சென்று ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை தலை மற்றும் கழுத்துப் மற்றும் கைப்பகுதிகளில் அதிக வெட்டு காயங்கள் விழுந்துள்ளதால் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வரவுள்ளார். அமைச்சரின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜிகுமார் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை ஆகியோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்தும் கொலையாளிகள் யார் என்பது குறித்தும் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்