குட்கா பற்றி போலீசில் புகார் அளித்த வியாபாரியை தாக்கிய இளைஞர்கள் கைது..!!
ஆத்தூர் அருகே சட்ட விரோதமாக குட்கா விற்பனை குறித்து, போலீசாரிடம் தகவல் கொடுத்தற்காக வியாபாரியை தாக்கிய குற்றத்திற்காக மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம், ஊராட்சி அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர். அறிவழகன்(61), இவர் விவசாய மூலிகை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூர் போலீசாரிடம் சிலரின் புகைப்படத்தை காட்டி. இவர்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்களா? குட்கா வியாபாரம் செய்கிறார்களா? என விவரம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அறிவழகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது, இன்னிலையில் நேற்று முன்தினம் இரவு, ஆத்தூரிலிருந்து தென்னங்குடி பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அறிவழகனை காரில் வழிமறித்த கும்பல் ஒன்று இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதில் படு காயமடைந்த அறிவழகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து அறிவழகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் தென்னங்குடி பாளையம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி [ வயது 37 ], மினி (எ) தமிழழகன் [ வயது 20 ], சஞ்சய் [ 21 ] ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் இந்த தாக்குதில் இன்னும் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூரியுள்ளனர். எனவே போலீசார் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பெயரில் மேலும் சில நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
Discussion about this post