பைக்கில் சென்ற நபர் கார் மோதி பலி..! விவரம் தெரியாததால் போலீஸ் விசாரணை..!!
ஆத்தூர் பகுதியில் இருவேறு இடங்களில் நடை பெற்ற சாலை விபத்தில் இருவர்பலி, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை..?
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் [ வயது 61], எல்,ஐ,சி, ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த இவர், தனது இருசக்கரவாகனத்தில் தலைவாசலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பு வதற்காக தலைவாசல் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் டூ சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ராமலிங்கத்தின் இருசக்கரவாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ராமலிங்கம் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
இதே போல் தம்மம் பட்டி அருகே கூடமலை வடக்கு காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த அதிமுக, கிளை செயலாளர் கனகராஜ் தம்மம் பட்டியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பும் போது தகரப்புதூர் என்னுமிடத்தில் கெங்கவல்லியில் இருந்து தம்மம்பட்டி நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான தில் கனகராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தலைவாசல் மற்றும் தம்மம் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post