தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வுமையம் கொடுத்த அப்டேட்..?
தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது லட்சத்தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள டெல்டா பகுதிகளின் இன்று முதல் வருகின்ற செப்டம்பர் 8-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது..
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
அதேபோல் நாளை புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், கோவை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும்
வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
மற்றும் அக்டோபர் 7-ம் தேதி கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்..
அதேபோல் அக்டோபர் 8-ம் தேதி கோயம்புத்தூர் திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி., நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
அதேபோல சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வுமையம் கேட்டுக்கொண்டுள்ளது…
மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னையில் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..