உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!
புதுக்கோட்டை, புதிய பேருந்து நிலையம் அருகே விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா பஜ்ரங்தள் கோட்ட பொறுப்பாளர் மேனா மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய குழு உறுப்பினர் கவிதாசன், கிழக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் மாநகரப் போக்குவரத்து காவல்துறை, தெற்கு சரக போக்குவரத்து காவல்நிலையம் மட்டும் சென்னை கூத்துப்பட்டறை இணைந்து சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைப்பெற்றது. இதனை சாலையில் சென்ற அனைவரும் நின்று கவனித்துச் சென்றனர்.
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு தேபோரா என்பவரது வீட்டில் இருந்து 12 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரகிபூர் ரகுமான் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் பலரும் தலைகவசம் அணிந்து சென்றனர்.