நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள் உங்கள் பார்வைக்காக…!!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவிலுக்கு சொந்தமான தக்கான்குளம் பக்தர் ஒருவர் சீனிவாச பெருமாள் சிலையை நிறுவி பூஜை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சிலை அகற்றுவதாக கோவில் நிர்வாகம் கூறிய நிலையில், பொதுமக்கள் சிலையை அகற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே சுவாமி விவேகானந்தர் பேரவையின் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில செயலாளர் கார்த்தியாயினி நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி, இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் , மற்றும் மாவட்டத்தலைவர் மனோகரன் விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் செயல்பட்டு வந்த க்ரீன் ஸ்டார் ரீகிரியேஷன் க்ளப் என்கிற தனியார் மதுபான கடையில் உரிய ரசீது இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்த ஆயிரத்து 186 மது பாட்டில்களை காவல்துறை ஆணையர் செங்குட்டுவன் மற்றும் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பெருங்காடு மலைகிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக கலைவாணி பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்தல், மற்றும் கழிவறைக்கு தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை செய்ய சொல்லி ஆசிரியர்கள் கட்டாய படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் செல்போனில் காலம் கழிப்பதாகவும், மாணவர்களை தங்களின் சுய வேலைகளுக்கு பயன்படுத்துவதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் நெல்லூர் பேட்டை சோலை நகர் பகுதியில் கோபால் என்பவருக்கு சொந்தமான ஊதவத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் மின் கசிவு ஏற்பட்டு 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து குடியாத்தம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..