“அம்மா எழுந்திருமா…” யானை பாகனால் கண் கலங்கிய பக்தர்கள்…!!
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் இன்று காலை 7:30 மணிக்கு காலமானதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு வயது 56. பக்தர் ஒருவரின் நன்கொடையாள் 1985 ஆம் ஆண்டு நெல்லையப்பர் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது நெல்லை மாவட்டத்தில் செல்ல பிள்ளையாகவே காந்திமதி இருந்து வந்தது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்ல திருவிழாக்கள் நடைபெறுவதை பக்தர்கள் கண்டு இருப்பார்கள்.
யானை காந்திமதியை வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் வைத்து கோவில் நிர்வாகம் பராமரித்து வந்தது யானை தனி ஃபேன் தனி குளியல் தொட்டி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு கோவிலின் செல்ல பிள்ளையாகவும் கோவில் ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது என்ற நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தூக்கமின்மை மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் வனத்துறை மற்றும் கால்நடை துறை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் யானை கீழே அமர்ந்து எழ முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்த நிலையில் யானை காந்திமதி உயிரிழந்தது, பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யானையை பராமரித்து வந்த பாகன் ராமதாஸ் மற்றும் உதவி பாகன் ஆகியோர் யானை முன்பு நின்று “அம்மா எழுந்திருமா, 40 வருஷாமா கூடவே இருந்தியே, இப்போ எங்களை விட்டுட்டு போறியே என கூறி கண்கலங்கிய சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்தது. பக்தர்களும் கண்ணீர் மல்க யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் யானை காந்திமதிக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..