“உன் தியாகம் பெரிது.. உறுதி அதனினும் பெரிது..” முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!!
கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்…
சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.. ஆனால் அந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.. இதுவரை 58 முறை.. அவரது ஜாமீன் மனுவை ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கியது..
இதனால் அவரது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உச்சநீதிமன்றதிற்கு மாற்றப்பட்டது.. அதன்பின் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் அல்லி பணி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் நீதிபதி கார்த்திகேயன் அந்த வழக்கை கடந்த செப்டம்பர் 3ம் தேதி விசாரணை செய்தார்..
அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் இன்று விசாரணை செய்யப்பட்டது… 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜியின் வழக்கில் அமலாக்கதுறை அதிகாரிகள் காலம் தாழ்த்துவதால் செந்தில் பாலாஜியிடம் 3000 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.. அவரது உடல்நலம் கருதி நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கினார்..
அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..
ஆருயிர் சகோதரர் செந்தில்பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது..!
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..