உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக, அரியலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 3பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக நகர வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், காவல் அலுவலர் கருணாநிதி திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டதில் ஓட்டுனர் உரிமம் பெறாத வாகனங்கள் உட்பட 10 ஆட்டோக்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி இந்திரா நகர் ஒட்டிய ஆற்றங்கரையான சவுண்டு மணல் எடுத்ததற்காக கரைக்கப்பட்ட கரையினை சீரமைத்து தரக்கோரியும், வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டியும் அப்பகுதி மக்கள் 60க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் கனிமொழியிடம் கோரி மனு அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயுதப்படை பிரிவு இரண்டாம் நிலை காவலர் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்