நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்…!! உங்கள் பார்வைக்காக..!!
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடி பகுதியை சேர்ந்த கனகா என்ற மூதாட்டியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அவரை தாக்கி சவரன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அவர்கள் களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மாரிச்செல்வம், இரவு நேரங்களில் கஞ்சா மற்றும் மதுபோதையில் இருசக்கர வாகனங்களை அடித்து உடைப்பது, பெட்ரோல் திருடுவது, இதனை தட்டி கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது போன்ற செயலில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாரிச்செல்வம் மீது 50 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டம் பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரத் என்ற இராணுவ வீரர் 17 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர். அப்போது மக்கள் முன் பேசிய அவர், இனிவரும் காலங்களில் இளைஞர்கள் யாரேனும் ராணுவத்தில் சேருவதற்கு ஆர்வம் இருந்தால், தன்னிடம் உரிய பயிற்சிகள் தர தாயார் என்று தெரிவித்தார்.