வக்பு சட்டத்தை எதிர்த்து திமுக வழக்கு தொடரும்..!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!
மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரையில் வக்பு வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் சொத்து வக்பு வாரிய உள்ளிட்டவற்றை முடிவு செய்வது தொடர்பான சட்ட பிரிவு 40ஐ வக்பு மசோதா தவிர்க்க முயற்சி செய்வதாகவும்., வாரியத்தின் அதிகாரத்தை மாற்ற மசோதா மட்டுப்படுத்தியுள்ளதாக கூறுகிறது.
வக்பு வாரிய சொத்துரிமையானது அதனை ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியத்தின் அனைத்து சொத்துக்களையும், அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் முறைப்படி பதிவு செய்து அதற்குரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் அதில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சட்டத் திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல, எண்ணிக்கை கூடுதலாகக் கிடைத்து இருக்கலாம். ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; முழுமையாகத் திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் நாம் இங்கே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. இந்நிலையில் அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் நள்ளிரவு 2 மணி அளவில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது என்றார்.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி, சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல் என்றும் மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல் என்றும் மறைமுகம் சாடினார்.
ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும். திமுக சார்பில் சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடரப்படும் என்றார்.