ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதை யாத்திரையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சிஆர்பிஎப் மற்றும் டெல்லி காவல் துறை புகைரளித்திருந்தனர் அதற்கு ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த நடைபயண யாத்திரை 100 நாட்களை கடந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் அவரை வரவேற்று திருவிழாக்கோலமாக்கி வருகின்றனர். மேலும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக சிஆர்பிஎப் மற்றும் டெல்லி காவல் துறை புகாரளித்தனர். இதற்கு தற்பொழுது ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், மக்களுடன் நேரில் சென்று பேசுவதாலும் அவர்களுடன் நெருங்கி இருப்பதாலும் குண்டு துளைக்காத காரில் பயணிக்க முடியாது என்றும், மேலும் நடைபயண யாத்திரையில் காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காரில் செல்ல முடியாது என்றும் விளக்கமளித்தார். இதற்கு முன் யாத்திரையில், ராகுலுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post