சமையல் ராணி ஆக ஆசையா..?
கொழுக்கட்டை செய்யும்போது மாவில் சிறிது பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை செய்தால் பிரிந்து வராமல் இருக்கும்.
துவையல் அரைக்கும்போது மிளகாய் சேர்த்து அரைப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக மிளகுத்தூள் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
மோர்குழம்பு செய்யும்போது மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு சேர்த்து வறுத்து அரைத்து குழம்பில் சேர்க்க சுவையாக இருக்கும்.
பச்சை பயிறை அரை மணி நேரம் ஊறவைத்து அதனை காய்கறி சாலட்டில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
அடை தோசை செய்யும்போது பெரிய வெங்காயம் சேர்ப்பதற்கு பதில் சின்ன வெங்காயத்தை தேங்காய் எண்ணெயில் வதக்கி சேர்க்க அடை சுவையாக இருக்கும்.
முட்டை வேக வைக்கும்போது அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்து தோல் உரித்தால் ஈசியாக உரிக்கலாம்.
நீண்ட நாட்களுக்கு வெண்டைக்காய் கெடாமல் இருக்க ஒரு ஈரத்துணியில் சுற்றி வைக்கலாம்.
காய்கறிகள் நறுக்கும்போது கை விரல்கள் கறுத்து போகாமல் இருக்க கைகளில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
மீன் தொட்டியை சுத்தம் செய்யும்போது அதனை கீழே கொட்டாமல் செடிகளில் கொட்டினால் செழித்து வளரும்.