சருமத்திற்கு அழகு சேர்க்கும் சில குறிப்புகள்…!
இன்றைய காலக்கட்டத்தில் அழகாக இருப்பதற்கு மக்கள் மத்தியில் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இதற்கு மார்கெட்டில் அதிகமாக செயற்கை பொருட்களும் விற்க்கப்படுகிறது. இது சருமத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. இதற்கு மாற்றாக இயற்கை முறையில் ஈசியாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துங்க, அதுதான் நம்முடைய சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடியது.
சருமத்தை இயற்கையாக எப்படி பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.
- தேன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து அழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
- கற்றாழை ஜெல்லை அடிக்கடி முகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம், இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.
- முகத்தில் எண்ணெய் வடியும் சிலருக்கு முகம் கரும்பாகவும் பொலிவிழந்தும் காணப்படும். இதனை போக்க முகத்தில் தக்காளி பேஸ்ட் தடவி காயவிட்டு அலச வேண்டும்.
- கசகசாவை நீரில் ஊற வைத்து அதனை பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி காயவைத்து அலசி வர முகம் ஆரோக்கியமாக மாறும். கரும்புள்ளிகள் குறையும்.
- முகத்தில் ஏற்ப்படும் கருமையை போக்க எலுமிச்சை சாற்றை தடவி வரலாம்.