“உசுரே நீ தான்..” தனுஷ் 41..
நடிகர் தனுஷ்:
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.
முதல் படம்:
2002-ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் தந்தை மற்றும் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமில் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் தமிழ் ரசிகர்களிடம் பெரிய அளவு கவனத்தை ஈர்த்தது.
இப்படத்திற்கு பின்னர் இவரது அண்ணன் இயக்கிய “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். இப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மிகபெரிய வரவேற்ப்பை பெற்று ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்றதை தொடர்ந்து இவர் அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து இவர் நடித்த “ஆடுகளம்” திரைப்படமும் மிக பெரிய அளவில் பிரபலமானது. இப்படத்திற்காக இவர் தேசிய விருது உள்பட பல விருதுகளை வென்று சர்வதேச அளவில் புகழ் பெற்றார்.
புரூஸ் லீ தனுஷ்:
2007-ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் “பொல்லாதவன்” திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகளில் இவர் மெல்லிய உடல் தோற்றம் கொண்டுள்ளதால் இவரை “இந்தியன் புரூஸ் லீ தனுஷ்” ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
திருமண வாழ்க்கை:
பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான “கஸ்தூரி ராஜா” மற்றும் விஜயலக்ஷ்மி என்பவர்களுக்கு மகனாக பிறந்த இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான “ஐஸ்வர்யா ரஜினிகாந்த்” காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருப்பினும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ் 50:
தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் களமிறங்கியுள்ள் தனுஷ் தமிழில் 49 வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில் இவரது 50வது திபை்படமான ராயன் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது பட்டைய கிளப்பி வருகிறது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்த நாள்:
இந்த நிலையில் தனுஷ் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”