சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த எடியூரப்பா…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!
கர்நாடகா முதலமைச்சராக இருந்த எடியூரப்பா ( வயது 75 ). பாஜக மேலிடத்தால் கட்டாயமாக பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதே நேரத்தில் கர்நாடகாவில் லிங்காயத்துகளின் வாக்குகளை பெறுவதற்காக எடியூரப்பா கட்சியில் இருந்து நீக்கப்படமால் இருக்கிறார்..
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், எடியூரப்பா 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி பெங்களூர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா தரப்பில் மனுத் தாக்கல் செய்யபட்டது. ஆனால் அந்த வழக்கை கர்நாடகா அரசு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றியது.
அதனையடுத்து எடியூரப்பாவை விசாரணைக்கு ஆஜராக சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியது. இதனிடையே எடியூரப்பா மீது புகார் கொடுத்த சிறுமியின் தாயார் திடீரென மரணம் அடைந்துள்ளார் அந்த சம்பவம் இன்னும் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் நுரையீரல் புற்றுநோயால் சிறுமியின் தாய் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எடியூரப்பாவை போக்சோவில் கைது செய்ய கோரி சிறுமியின் சகோதரர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதனால் எடியூரப்பாவை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது போக்சோ நீதிமன்றம். அந்த உத்தரவைத் தொடர்ந்து எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எடியூரப்பாவோ டெல்லிக்கு தப்பி சென்றுவிட்டார். இதனால் கர்நாடகா சிறப்புப் புலனாய்வுக் குழுவும் டெல்லி சென்றது. மேலும் தம்மை கைது செய்ய தடை விதிக்க கோரி எடியூரப்பா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதனை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 17-ந் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அதுவரை எடியூரப்பாவை கைது செய்யக் கூடாது என தடை விதித்தது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, தாம் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு நாளை (ஜூன் 17) ஆஜராக இருக்கிறேன். நான் யார் மீதும் எந்த குற்றமும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் யாரெல்லாம் எனக்கு எதிராக சதி செய்தனர் என தெரியும் என்றார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..