ராணிப்பேட்டை வாராகியம்மன் கோவிலில் நடைபெற்ற யாக பூஜை..!! காண கண் கோடி வேண்டும்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கருமாரியம்மன் வராகியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆயில் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீ வராகி அம்மன் திருக்கோவிலில் அமாவாசை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கருமாரியம்மன் வராகி அம்மன் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து உலக நன்மை வேண்டி 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.