ஞாயிற்றுக் கிழமை இறைவன் வழிபாடு..!
கடந்த சில நாட்களாக இறைவன் வழிபாடு பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அதில் இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது சூரிய பகவான் வழிபாடு.
நவ கிரகங்களில் முதன்மை கடவுளாக விளங்குபவர், “சூரிய பகவான்” ஞாயிறு தோறும் விரதம் இருந்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
முக்கியமாக சூரிய தோஷம் இருப்பவர்கள் விரதம் இருந்து வழிபட்டால், தோஷம் நீங்கி விடுமாம்.
ஞாயிற்றுக் கிழமை அன்று கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி.., நவ கிரகத்தை சுற்றி வழிபட்டால் சிக்கல் நீங்கி விடும், கடன் தொல்லை தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
– வெ.லோகேஸ்வரி.