சுனிதா வில்லியம்சை தெரியும். வாலென்டினாவை தெரியுமா? … இவர்தான் விண்வெளிக்கு தனியாக சென்ற முதல் பெண். worker became first woman in space
கடந்த 4 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் டெக்ஸாஸில் இருந்து நியூ ஷெப்பர்ட் ராக்கெட், 6 பெண்களை ஏற்றிக்கொண்டு விண்வெளியை நோக்கி சென்றது. இதில், பாடகி கெட்டி பெர்ரியுடன் தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ் மற்றும் சிபிஎஸ் தொலைகாட்சியின் தொகுப்பாளர் கேல் கிங், நாசாவின் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, மனித உரிமை ஆர்வலர் அமாண்டா இங்குயென் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் பயணித்தனர்.
ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த விண்வெளி பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விண்வெளி பயணம் 11 நிமிடங்ள் மட்டும்தான். இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை கொண்டு சென்றது. கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு புவிஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியைக் கண்டு களித்தனர். பின்னர், தரைக்கு திரும்பினர்.
விண்வெளிக்கு முதன்முறையாக சென்ற பெண்கள் குழு இதுதான் என்று பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் ஆனால், விண்வெளிக்கு தனியாக சென்ற பெண்ணை பற்றி தெரியுமா? அவர்தான் விலாடியா டெரஸ்கோவா. ரஷ்யாவை சேர்ந்த இவர் விண்வெளி வீராங்கனையாக பயிற்சி பெற்றவர் இல்லை. மில் மற்றுட் டயர் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்தவர்.
ரஷ்யாவின் வோல்கா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த விலாடியாவுக்கு பாராசூட் பயிற்சி பெறுவதில் அலாதி பிரியம் உண்டு. தனது பணி நேரத்தை தவிர பாராசூட் கிளப்பில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவருக்குதான் அந்த அதிர்ஷ்டம் அடித்தது.
கடந்த 1960களில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் விண்வெளியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவிய காலக்கட்டம். குருசேவ் காலத்தில் 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி வாஸ்டக் 1 விண்கலத்தில் 108 நிமிடங்கள் பயணித்து விண்வெளியை அடைந்தார் யூரி கஹாரின் . விண்வெளியை எட்டிய முதல் மனிதர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
இது அமெரிக்காவுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியது. அப்போது, அமெரிக்காவை விட விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்த ரஷ்யா, மற்றொரு அதிர்ச்சியை அமெரிக்காவுக்கு கொடுக்க முடிவு செய்தது. அதுதான், தனியாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பும் முடிவுதான் அது. இதற்காக, அறிவிப்பு வெளியிட்ட போது 400 விண்ணப்பங்கள் வந்தன. அதில், பாராசூட்டில் பறக்கும் ஆர்வம் கொண்ட வாலென்டினாவும் ஒருவர்.
வயது 30க்குள் இருக்க வேண்டும். 70 கிலோ எடையும் 170 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். கூடவே , பாராசூட் பயிற்சியும் முக்கியம் என்பதே தகுதிகளாக இருந்தன. இந்த தகுதி அனைத்தும் விலாடியாவுக்கு இருந்ததால்,. கடைசியாக தேர்வு செய்யப்பட்ட 5 பெண்களில் ஒருவராக இடம் பெற்றிருந்தார். இதையடுத்து, ஸ்டார் சிட்டி (தற்போது யூரி ககாரின் விண்வெளி பயிற்சி மையம் )என்ற ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகிலுள்ள விண்வெளி பயிற்சி மையத்துக்கு 5 பேரும் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, யூரி ககாரினே இந்த பெண்களுக்கு நேரடியாக பயிற்சி அளித்தார்.
இரு ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பிறகு, வாலென்டினா மட்டுமே விண்வெளிக்கு பயணிக்க தேர்வு செய்யப்பட்டார். வால்டாக் விண்கலம் பூமிக்கு திரும்பி வரும் போது, அதில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பாராசூட்டை எஜக்ட் செய்து பறந்து வெளியே வரவேண்டும். விலாடியாவின் பாராசூட் அனுபவம் அவரின் கூடுதல் தகுதியாக இருந்தது. தொடர்ந்து, 1963 ஜுன் 16ம் தேதி வாஸ்டாக் 6 விண்கலத்தில் விண்வெளியை நோக்கி பயணித்தார் வாலென்டினா. கிட்டத்ட்ட 3 நாட்கள் விண்வெளியில் தங்கிருந்து விட்டு வெற்றிக்கரமாக பூமிக்கு திரும்பினார். வாஸ்டாக் பூமியில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் இருந்த போது, அவர் பாராசூட் வழியாக எஜக்ட் ஆகி தரையில் லேண்ட் ஆனார்.
ரஷ்யாவே வாலென்டினாவை கொண்டாடி மகிழ்ந்தது. விண்வெளியை எட்டிய முதல் பெண் என்ற பெருமையை பெற்ற வாலென்டினா பின்னர், அரசியலில் குதித்தார். தற்போது, 88 வயதான அவர் எம்.பியாகவும் உள்ளார். worker became first woman in space
சுனிதாவை அறிந்த அளவுக்கு வாலென்டினாவை அறிந்து வைத்திருப்பதும் அவசியம்தானே!