பாஜக செய்த வேலை..!! பாமக அன்புமணி ராமதாஸ் பதிலடி..!! தேர்தல் ஆணையத்தின் முடிவு..!!
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு தொகுதியான தருமபுரியில் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி நிற்கிறார். இந்நிலையில் பாமக சில பணப்பட்டுவாடா வேலைகள் செய்துவருவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பாஜக கூட்டணியின் சார்பில் பாமகவிற்கு திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம் என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில் தருமபுரி மாவட்டத்தின் வேட்பளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா போட்டியிட போவதாக அறிக்கை வெளியானது.
தருமபுரி தொகுதியில் பாமகவிற்கு நல்ல செல்வாக்கு இருந்ததால், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றிருந்தார். அதன் பின் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோற்ற நிலையில் மீண்டும் அன்புமணி ராமதாஸ் களமிறங்குவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அன்புமணி ராமதாசிற்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
அதன்பிறகு அரசாங்கம் மாற்றப்பட்டதோடு, அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தருமபுரி தொகுதி மக்கள் பாமக மீது வைத்திருக்கும் அன்பால் மீண்டும் தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் சவுமியா அன்புமணி பாமக வேட்பாளராக
நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் பாமகவின் செயல்பாட்டை கண்டு பாஜகவின் கூட்டணியில் உள்ள பிற கட்சியினர் அதிருப்தியில் இருந்துள்ளனர்…, மேலும் பாமகவின் செயல்பாடு குறித்து கூட்டணி கட்சியான பாஜக தலைமைக்கு பரபரப்பான புகார் சென்றுள்ளது. அதாவது தேர்தல் சமயங்களில் கூட்டணியில் இருந்தாலும் கூட சில நிர்வாகிகள் தங்களின் கட்சிகளை விட்டு பிற கட்சிகளுக்கு பணி செய்வது ஒரு ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது.
திமுக கூட்டணிக்குள் நடப்பது போல, பாஜக கூட்டணியிலும் இந்த குளறுபடி நடக்கிறது. அதாவது, பாஜக கூட்டணியில் பாமக 10 இடங்களில் போட்டியிடும் நிலையில் சவுமியா அன்புமணி வெற்றிக்காக தேர்தல் பணிகளை முன்னெடுக்க வட தமிழகத்திலுள்ள பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தர்மபுரியில் களம் இறங்கியுள்ளனர்.
இதனால், வட தமிழகத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜிகே வாசனின் தமாகாவுக்கு களப்பணி செய்ய ஆள் இல்லாதது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுயுள்ளது.
இந்த விவகாரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு தெரிவித்துள்ளார். பின்னர் தேர்தல் தலைமையகம் இதுகுறித்து அன்புமணியிடம் பேசியபோது இதெல்லாம் சாதாரணமான ஒரு விஷயம், தேர்தல் நெருங்கும் சமையத்தில் சிறந்த தலைவர்களின் செல்வாக்கை குறைக்க ப குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். இது ஆரம்பம் மட்டுமே தேர்தல் நெருங்க நெருங்க தான் இன்னும் பல கூத்துகளை நீங்கள் பார்க்க போறீங்க.
என் மனைவி தருமபுரி மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாக பல பொய்யான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்கள். அப்படி பணம் கொடுத்து நாங்கள் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை, எங்களின் தொண்டு என்ன, மக்களுக்கு நாங்கள் செய்த உதவி என்னவென்று அனைவருக்கும் தெரியும்.
தேர்தல் ஆணையமே தருமபுரியில் சோதனை மேற்கொண்டு பணபட்டுவாடா புழங்கவில்லை என தெரிவித்துவிட்டார்கள். பாமக மீது குற்றம் சாட்டி கூட இருந்தே குழிபறிக்க நினைப்பவர்களுக்கு ஒன்று மட்டுமே சொல்லி கொள்ள விரும்புகிறேன்.., அதற்கான பதிலடி தேர்தல் முடிவில் தெரியும் என கூறியுள்ளார்.