அண்ணாமலை மீது 26 வழக்குகள்..!! வெளியான ஆதாரம்..!! பிரமாண பத்திரிக்கை..!!
அண்ணாமலை வேட்புமனு தாக்கல் :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்காக வேட்புமனு தாக்ல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து கோவை லோக்சபா தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்ததுடன் தனது சொத்து குவிப்பு விவரங்களையும், தன் மீது உள்ள வழக்குகளின் விவரங்களையும் பிரமாண பத்திரமாக அண்ணாமலை தாக்கல் செய்துள்ளார்.
அண்ணாமலை மீது 26 வழக்கு :
திருப்பத்தூர் ஆம்பூர் கவால் நிலையம், தருமபுரி பொம்மிடி காவல் நிலையம், திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையம், சென்னை மாநகர் காவல் நிலையம், நுங்கம்பாக்கம், எழும்பூர், திருவள்ளூர், சென்னை பூக்கடை கடற்கரை காவல் நிலையம், கரூர் நாவட்டம், அரவக்குறிச்சி, திண்டுக்கல், பழனி மற்றும் கோவை என மேற்கண்ட அனைத்து மாவட்டங்களிலும் ரத்தினபுரி காவல் நிலையம் உட்பட 24 வழக்குகள் அண்ணாமலை மீது நிலுவையில் உள்ளது.
மேலும், சேலத்திலும், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்ணாமலை மீதான வழக்குகளுக்கு சரியான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்பதால் அண்ணாமலை, பிரமாண பத்திரத்தில் தகவல் அளித்துள்ளார்.
அண்ணாமலை பெயரில் அசையும் சொத்து 36 லட்சத்து 4100 ரூபாயும், அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாயும் உள்ளது. அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் அசையும் சொத்தும், 53 லட்ச ரூபாய் அசையா சொத்தும், 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி கார் வைத்துள்ளார்.
சொத்துக்களின் மதிப்பு :
நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தபின் பிரமாணப் பத்திரத்தில் 3கோடி ரூபாய்க்கான சொத்து மதிப்பு விவரங்கள் குறித்த அதரங்களை சமர்ப்பித்துள்ளார். ஆனால் அவர் மீது உள்ள 26 வழக்குகளுக்கு முறையான சாட்சிகள் இல்லாததால் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..